தென்தாமரைகுளம்., ஏப். 20.
அய்யா வைகுண்ட சாமி துவையல் தவசு இருந்ததை நினைவு கூறுகின்ற வகையில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் வட்ட கோட்டை அருகே ஆமணக்கன் விளையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு விழா கொண்டாடப்பட்டுவருகிறது இந்த ஆண்டுக்கான விழா ஏப்ரல் 18ஆம் தேதி கொண்டாடப்பட்டது மாலை அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார் .வாகை நற்பதி தருமகர்த்தாக்கள் பாலசந்தர் ,பால சுரேஷ், அய்யா வைகுண்டர் அன்புவனம் நிர்வாகி ஆர். தர்ம ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சென்னை முருகன், ஆசிரியர் ரமேஷ் திரு ஏடு வாசிப்பு பாராயணம் உரை ஆசிரியர் சோமு, விகேபுரம் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு துவையல் தவசுபற்றி பேசினர். திருநெல்வேலி மாவட்டம் வி கே புரம் அன்பர்கள் சார்பில் அன்னதர்மம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை தர்மகத்தா பால சந்தர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.