ராமநாதபுரம், ஏப்.19-
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியில் ஐக்கிய ஜமாத் சார்பில் வக்பு திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொண்டி ஐக்கிய ஜமாத்தின் தலைவர் (செயல் அலுவலர் ஓய்வு ) சையத் அலி தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய ஜமாத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி ஃப்ரீ வரவேற்புரை நிகழ்த்தினார். திருவாடனை வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயுப்கான் , ஐக்கிய ஜமாத் பொருளாளர் ஜலால் மற்றும் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள்,
அனைத்து தெரு ஜமாத்துடைய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பாசிச ஒன்றிய அரசை கண்டித்தும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன உரையும் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. தொண்டி ஐக்கிய ஜமாத்தின் செயலாளர் ஃபாருக் நன்றி கூறினார்.



