தருமபுரி அனசாகரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது . கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்துவிநாயகர் ரதம் மற்றும் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். அன்னதான வழங்கப்பட்டது. தருமபுரி அண்ணாமலை கவுண்டர் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிறகு காவடி ஊர்வலம்,முருகர் வள்ளி தெய்வானை உற்சவர் திருவீதி உலாவும் நடைபெற்றது. ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.



