கிருஷ்ணகிரி,ஏப்.7 – தமிழ்நாடு மின்சார வாரியம் கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் போச்சம்பள்ளி கோட்டம் போச்சம்பள்ளி மின்சார வாரியம் சார்பில், மின் கட்டணம், மின் மீட்டர், குறைந்த மின் அழுத்தம், சேதமடைந்த மின் கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் போச்சம்பள்ளி மின்சார செயற்பொறியாளர் அலுவலகம் வளாகத்தில் போச்சம்பள்ளி செயற்பொறியாளர் எம்.இந்திரா தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் ஊத்தங்கரை, மத்தூர், அரசம்பட்டி, போச்சம்பள்ளி, பர்கூர், காட்டாகரம், ஜெகதேவி, ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். முகாமில் கிருஷ்ணகிரி செயற்பொறியாளர் பொது செ. கவிதா, உதவி செயற்பொறியாளர்கள் சி. ஸ்டாலின், எம். மகாலட்சுமி, சி. நாகராஜ், ஜெ. சத்திய நாராயணன், போச்சம்பள்ளி உதவி பொறியாளர் செல்வம் மற்றும் உதவி பொறியாளர்கள் மின்வாரிய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



