சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்று வரும் அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வர அய்யனார் அருளாசி பெற்ற ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா ஏழு நாட்கள் நடைபெற வேண்டும் என கிராம பொதுமக்களால் உத்தேசிக்கப்பட்டு விழா கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இதனை தொடர்ந்து இரவு பெண்கள் கும்மி கொட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா நிறைவு நாளன்று அல்லிநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ சட்டி எடுத்து வந்து செலுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



