தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், குழிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஐந்தாம் வகுப்பு மாணவிக ளான ஸ்ருத்திகா, பவுனம்மாள், மகாலட்சுமி ஆகியோர் எழுதிய கையெழுத்து பிரதி நூல்களை வெளியிடப்பட்டது. மாணவ, மாணவிகள் சிறு வயதில் படைபாற்றலுடன் வளர்வது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டு விழாவில் பங்கேற்றவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இது கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் சதீஷ் கையெழுத்து பிரதி நூல்களை வெளியிட்ட மாணவிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல், பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் முனுசாமி, குழிப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி ஆகியோர் உடனி ருந்தனர்.



