அஞ்சுகிராமம் மார்ச் 30
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நகை கடை உடைக்கப்பட்டு 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இக் கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டு போன 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மீட்கப்பட்டது.
இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் கூறியதாவது:
அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள என் எஸ் மணி ஜூவல்லரியில் கடையின் உரிமையாளர் கடந்த 16ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு அடுத்த நாள் வந்து பார்த்த போது கடை உடைக்கப்பட்டு 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நகை கடையின் உரிமையாளர் சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தில் விரல்ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் மேற்பார்வையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தனிப்படையினர் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையிலும், 200 க்கும் மேற்பட்ட சிசி டிவி காட்சிகளை ஆராய்ந்து, தொழில்நுட்ப உதவியுடன் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது புன்னார்குளம் பகுதியை சேர்ந்த அஜித்(29), அசோக்(24), சுரேஷ்(23) ஆகிய 3 பேர் என் தெரிய வந்தது. உடனடியாக தனிப்படையினர் இக்கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டு போன 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மொத்தமும் மீட்கப்பட்டது.
குற்றவாளிகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் யூ டியுப் இணையதளங்களை பார்த்து திருடுவதற்கு தெரிந்து கொண்டுள்ளனர். இணையதளத்தை பார்த்து தடயங்களை அழிப்பதற்கு முயற்சித்துள்ளனர் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளதால் முகம் சரியாக தெரியவில்லை. இணையதளத்தை பார்த்து சிசிடிவி காட்சிகளை சேமிக்கும் டிவிஆர்ஐ திருடி சென்றுள்ளனர். எனவே சிசிடிவி வைக்கும் போது செல்போனிலும் இணைப்பு வைத்துக் கொள்வது அவசியமாகும். மேலும் பல சிசிடிவுகள் குறைந்த குவாலிட்டியில் இருந்ததால் அதில் அவரது பதிவுகள் தெளிவாக இல்லை விலை உயர்ந்த பொருட்களை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் தரம் மிகுந்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவது அவசியம் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதை செலவாக பார்க்காமல் ஒரு முதலீடாக பார்க்க வேண்டும்
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ததுடன் 100 சதவீதம் கொள்ளை போன பொருட்களை மீட்டதற்காக கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார், அஞ்சுகிராமம் எஸ்ஐ ஆறுமுகம் மற்றும் தனிப்படையினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.