வேலூர்=27
வேலூர் மாவட்டம் , ஏபிஜே அப்துல் கலாம் ஆட்டோ ஸ்டான்ட் சார்பில் 1ஆம் ஆண்டு ஆட்டோ டிரைவர் உமா சங்கர் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் ஆட்டோ ஓட்டுநர்கள் ,உதவும் உள்ளங்கள் ,வேலூர் இரத்தம் மையம், இணைந்து நடத்திய இரத்ததானம் முகாம் வேலூர் வெல்ல மண்டி வீதியில் உள்ள உதவும் உள்ளங்கள் அலுவலகத்தில் தலைவர் சந்திரசேகர் தலைமையிலும் வழக்கறிஞர் சிவக்குமார் ,செயலர் பொறி .இராமச்சந்திரன் ,ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது .இதில் ஏபிஜே அப்துல் கலாம் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் ஜி. அசோக் குமார், செயலாளர் யுவராஜ், பொருளாளர் ஜெயச்சந்திரன் , பிரேம், மைக்கேல், சலீம் , விஎஸ்எஸ் தொழிற்பயிற்சி கல்லூரி நிறுவனர் டாக்டர் ஜி. நவக்குமார், கோவிந்தன், முகாம் ஒருங்கிணைப்பாளர் வேலூர் இரத்தம் மையம் கே. சிவன் பாஸ்டர் வேதமணி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர். இரத்த தானம் முகாமினை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.