திண்டுக்கல்,மே.22:
சித்தயன்கோட்டையில் உள்ள அரசு சார்பற்ற அமைப்பில் மதுரை வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் நிலையத்தில் நடைபெறுகின்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். அமைப்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்ப்ரோஸ் அங்கு நடைபெறுகின்ற செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.மாணவர்கள் பவசரண்,தேவ்சங்கர்,சந்துரு,தரணீஸ்வர்,அரவிந்குமார்,பாலாஜி,அமர்நாத்,ஆதித்யவலவன், அபிராம் ஆகியோர் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அங்கு நடை பெரும் சமுதாய வளர்ச்சிப்பணிகளின் தகவல்களை அறிந்துகொண்டு பயனடைந்தனர்



