தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக புதிய பொறுப்பாளராக ஆ. மணி எம்பி
நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட பின் முதல்முறையாக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு திமுக சார்பில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் திருவுருவ சிலைக்கும், கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்தும்,மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி வார்டு கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



