சேலம்
சேலம் மத்திய மாவட்ட அஸ்தம்பட்டி பகுதி திமுக சார்பில் முதல மைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வார்டு செயலாளர் ஷாநவாஸ் வரவேற்பு பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கண்ணன், சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் குமரவேல், மாநகர செயலாளர் ரகுபதி 8 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நல்ல உதவிகள் வழங்கப்பட்டன.