இளையான்குடி: மார்ச்:13
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்கம், சுரேஷ், ஜெயராஜ் ஆகிய கிறிஸ்தவ
குடும்பங்களின் சார்பில் அங்குள்ள கோவிலான அருள்மிகு ஶ்ரீ மாணிக்கவள்ளி அம்மன் ஆலய குடுமுழுக்கு விழாவினை சிறப்பாக நடத்தினர்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
இளையான்குடி வடக்கு ஒன்றியக்கழக செயலாளர் சுப. மதியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிவாச்சார்யர்கள் ஆலயக்கலசங்களில் புனித நீர் தெளித்து குடமுழுக்கு விழாவினை சிறப்பாக நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.