ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா ஊ. கரிசல்குளம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித்சிங் காலோன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் 287 பயனாளிகளுக்கு 38.87 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் பரமக்குடிசப் கலெக்டர் அபிலாஷா கவுர். கமுதி தாசில்தார் காதர்முகைதீன், நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் சேதுராமன் துணை தாசில்தார்கள் வெங்கடேசன், வேலவன் கமுதி வட்டார வளர்ச்சி ஆனையாளர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன்(கி. ஊராட்சிகள்) உள்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்)



