ராமநாதபுரம், மார்ச் 3-
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை.தேசிய பசுமைப் படை இராமநாதபுரம் மாவட்டம் ஆகியவை இணைந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய பசுமைப் படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி முஹம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இராஜ மனோகரன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று கண்காட்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் வரவேற்புரை ஆற்றினார். நீடித்த நிலையான வாழ்க்கைமுறைக் கண்காட்சி தொடர்பான செய்திகளை தனது அறிமுக உரையில் பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் எடுத்துக் கூறினார்.
இவ்விழாவிற்கு தொடக்கக் கல்வியின் மாவட்டக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் , தனியார் பள்ளிகளின் பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர் ரவி, முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். சோமசுந்தரம், முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் முனைவர். சேகர்,, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கண்காட்சியில் மாணவர்கள் ஆற்றல் சேமிப்பு வழிமுறைகள், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிக்கு மாற்று முறைகள், ஆரோக்கியமான உணவு, கழிவிலிருந்து செல்வம் மற்றும் காலநிலை மாற்றத்தை குறைக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். கண்காட்சியின் நடுவர்களாக கமுதி கல்லூரியின் முதல்வர் முனைவர்.தர்மர் , பேராசிரியர் ராஜேஷ் கண்ணன் , முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியை ஆர்த்தி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலர் ரவி பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் எட்டாயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் ஏழாயிரம், ஆறுதல் பரிசு ரூபாய் ஐயாயிரம் என இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் ரூபாய் 35 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கண்காட்சி அமைத்த அனைத்து பள்ளிகளுக்கும் ரூபாய் ஆயிரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய பசுமைப் படையின் சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெர்னாடிட் மற்றும் பரமக்குடி கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். செங்குடி பள்ளியின் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாசிரியர் கருணாகரன் நன்றியுரை ஆற்றினார்.