தஞ்சாவூர் மே 22
தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத் தில் 4.17 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழக முதல்வரின் மக்கள் நலன் காக்கும் மகத்தான திட்டங்களின் வரிசையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்றும் மாநிலங்களுக்கு வழிகாட்டும் சிறப்பான திட்டமாக உள்ளது தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .இந்த திட்டத் தின்மூலம் இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பலனடைந்துள்ளனர் இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 999 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்.