ஈரோடு பிப் 26
ஈரோடு மாநகர பொதுமக்கள் சார்பாக முனிசிபல் காலனி மெயின்ரோடு ருக்ரா மஹாலில் சிகரம் தொட்ட சாதனையாளர் விருது நடைபெற்றது.
விழாவில் கவிதாலயம் ராமலிங்கம் வரவேற்றார்.
மஞ்சள் வணிகர்கள் சங்கத்தலைவர் டர்மரிக் சின்னசாமி முன்னிலை வகித்தார். ருக்ரா மஹால் உரிமையாளர் கொங்கு வேலுசாமி தலைமை வகித்தார்.
சித்தா மருத்துவத்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சேவையாற்றிவரும் அருள் சித்தா மருத்துவமனை டாக்டர் அருள் நாகலிங்கத்திற்கு ஈரோடு மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிகரம் தொட்ட சாதனையாளர் விருதை வழங்கினார். மாரிதாஸ்,பரதநாட்டிய கலைஞர்கள் நிவாஷினி,அம்ரிதா,
கிருத்திகா நடராஜன் ஹேமலதா,நிலா,ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
முடிவில் ருக்ரா மஹால் பங்குதாரர்கள் ஜெயந்த் வேலுசாமி,ராகவேந்தர் வேலுசாமி மற்றும் கவிதாலயம் மகளிர் அணித்தலைவி வெண்ணிலா ஆகியோர் நன்றி கூறினார்கள்.



