களியக்காவிளை, பிப்,24-
மாவட்ட அளவிலான வர்ண ஜால மெகா ஓவியப் போட்டியில் களியக்காவிளை அரசு உயர்நிலைய் பள்ளி மாணவிக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
. நாகர்கோவில் ஆதர்ஷ் வித்தியா கேந்திர சி.பி.எஸ்.சி. பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வர்ண ஜால மெகா ஓவியப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் களியக்காவிளை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மீகா பங்கேற்று போட்டியில் கலந்து கொண்டார். அவருக்கு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு கிடைத்தது வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.



