கல்லாவி சாலையில் திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை பகுதியில் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இந்த நிகழ்வில் திமுக நகரக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிலையில் சாலை ஓரம் உள்ள கடைகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி இந்தி திணிப்பு குறித்து எடுத்துக் கூறினார்கள் ஒன்றிய செயலாளர் வடக்கு ஒன்றியம் மூன்றம்பட்டி குமரேசன் தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம் மற்றும் கட்சி பேரூராட்சி தலைவர் அமானுல்லா நகர செயலாளர் தீபக் மருத்துவர் அணி மாவட்ட தலைவர் கந்தசாமி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டு திணிக்காதே திணிக்காதே ஆதிக்க இந்தியை திணிக்காதே என மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு துண்டு பிரசுரர்கள் வழங்கி இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது