தருமபுரி மாவட்டம், தருமபுரி கிழக்கு ஒன்றியம் சார்பில் விடுதலை சிறுத்தைகள்
கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதையும், பானை சின்னம் ஒதுக்கிய தையும் கட்சியின் சார்பில் அங்கீகார வெற்றி பெருவிழாவாக தருமபுரி குமாரசாமிபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். தருமபுரி கிழக்கு ஒன்றிய பொருளாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார் .செந்தில், பழனிச்சாமி, கலையரசன், சந்தான மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராஜா (எ) மன்னன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் துவக்க உரையாற்றினார். பாலாஜி சட்டமன்ற குழு உறுப்பினர், தமிழ்ச்செல்வன் தலைமை நிலைய செயலாளர், தமிழ் அன்வர் மண்டல செயலாளர், செந்தில்குமார் மாநிலத் துணைச் செயலாளர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தசாமி நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.