மதுரை மே 21,
வசந்த மண்டப ஊஞ்சல் சேவையில் முருகப் பெருமான். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இத்திருவிழா 11 நாட்களுக்கு நடைபெறும். தினமும் மாலை முருகப்பெருமான் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெறும்.
இத்திருவிழாவின் ஏழாம் நாளன்று இரவு சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்று வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை 22 ம்தேதி வைகாசி விசாக பால்குடம் திருவிழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.