ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் 11 வது மாநில மாநாடு கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் மாநாட்டில் ரத்தம் வழங்கி ரத்த தானம் முகாமை துவக்கி வைத்தார்!
ராமநாதபுரம், பிப். 21-
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் 11 வது மாநில மாநாடு ஏ1 திருமண மஹாலில் துவங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் 11 வது மாநில மாநாட்டில் முதல் நிகழ்ச்சியாக ரத்ததான முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் ரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார். உடல்தான் முகாமை கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) பிரதாப் சிங் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநாட்டு அரங்கில் சங்க கொடி ஏற்றி வைத்தனர். 11 வது மாநில மாநாட்டில் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்து பேசினார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் அஞ்சலி திருமணம் வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் கணேசமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் பொதுச்செயலாளர் சேகர் துவக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் பொதுச் செயலாளர் ரவி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மாநில அலுவலர்கள் சங்கம் பொதுச்செயலாளர் குமரேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பாரி வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இதனைத் தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதங்கள் நடைபெற்றன. மாலை 6:00 மணிக்கு கருத்தரங்கம் மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் திருவரங்கன் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் காலம் கருதி இருப்பர் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முன்னாள் மண்டல செயலாளர் சுவாமிநாதன் கோரிக்கைகளின் உயிரும் உலகமயமும் என்ற தலைப்பில் பேசினார். மாநிலச் செயலாளர் ஜம்ரூத் நிஷா நன்றி கூறினார். இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மாநாட்டில் பேரணி பிரதிநிதிகள் விவாதங்கள் தொடர்ச்சி தீர்மானங்கள் நிறைவேற்றுதல் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது.