தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும். பட்டா வேண்டுதல் ,சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகையில் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 594- மனுக்கள் வந்தன. மாவட்ட மைய நூலகம் சார்பில் சிறுவாணி இளைஞர் இலக்கியத் திருவிழா 2025- ன் கீழ் நடந்த இரண்டு நிமிட பேச்சாற்றல், நூல் அறிமுகம், இலக்கிய வினாடி வினா, உடனடி ஹைக்கூ, ஓவிய போட்டி, விவாத மேடை, ஆறு நிமிட
பேச்சுப்போட்டி, கணினி படம் உருவாக்கம், புக் ரிவியூ , ப்ராம்ட் என்ஜினியரிங் உள்ளிட்ட 10 தலைப்புகளில் நடந்த போட்டிகளில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.4 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம் என வெற்றி பெற்ற 30 தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பெட்டில் பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது டிஆர்ஓ கவிதா, தனித்துணை கலெக்டர் சுப்பிரமணி, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.