பூதப்பாண்டி – பெப்ரவரி-18 – பூதப்பாண்டியில் தாலுகாவின் தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனையில் இரவு பகல் என எந்நேரமும் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் பணியில் உள்ளார்கள் பூதப்பாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கிறார்கள் அது போக ஆபரேசன், பிரசவம் மற்றும் விபத்துக்கள் என உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள் அது போக வாரத்திற்க்கு ஒரு முறை கர்ப்பிணி பெண்கள், சுகர் நோயாளிகள், இருதய நோயாளிகள் , ஆஸ்த்துமாபோன்ற நோய்களுக்கான மாத்திரைகள், மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் என எந்நேரமும் இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள் மேலும் உள்நோயாளிகளின் துணையாக ஒரு ஆள் எந்நேரமும் இருப்பது வாடிக்கை ஆகையால் இந்த மருத்துவமனைக்கு எந்நேரமும் பொதுமக்கள் வருவது போவதுமாக உள்ளது இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ துறை சம்பந்தமான ஊழியர்கள் 90 சதவிகிதம் பெண்களே பணியில் இருக்கிறார்கள் சமீப காலமாக ஏதாவது ஒரு நோய்க்கு அவசரமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் உடன் வருபவர்கள் பலர் அத்துமீறி மருத்துவர்கள் பரிசோதிக்கும் அறைக்குள் செல்வதும் அதை தடுக்கும் மருத்துவரையும், செவிலியர்களையும் மற்ற ஊழியர்களையும் நோயாளிகளுடன் வரும் நபர் தகாத வார்த்தைகள் பேசுவது ஒரு வாடிக்கையான சம்பவமாகவே நடந்து வருகிறது இதனால் மருத்துவர்கள் தங்களது மக்கள் சேவைகளை செய்ய முடியாமல் அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்து அவர்களின் உதவியுடன் அந்த நபரை வெளியேற்றி விட்டு தங்கள் பணியினை செய்து வருகிறார்கள் இந்த நிலை முற்றிலும் மாறி சுதந்திரமாக நோயாறிகளை பரிசோதித்து அவர்களுக்கு உரிய மருத்துவ தேவைகளை செய்ய வேண்டுமெனில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் செயல்படுவது போல் இந்த மருத்துவமனையிலும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பிற்க்காக ஒரு போலீஸ் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் போலீசார் நியமிக்க கோரிக்கை
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics