புல்வாமா தாக்குதல் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி:-
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், வெடி மருந்து நிரப்பப்பட்ட காரால் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பால்
நடத்தப்பட்ட தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 40 வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைவு தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் சார்பாக அனுசரிக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் அறிவரசன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.