மார்த்தாண்டம், பிப்- 15
மார்த்தாண்டம் சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலைகள் குண்டு குழியாக படுமோசமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மழை நீர் சாலை வழியாக பாய்ந்து சாலையின் இரு புறங்களில் உள்ள கடைகளில் புகுந்து கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மார்த்தாண்டம் பகுதி சாலைகளை விரிவாக்கம் செய்து, வடிகால் வசதியுடன் சீரமைக்க வேண்டும் என மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவை சந்தித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரம ராஜாவுடன் சேர்ந்து நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அந்த மனுவில், – அடிக்கடி இந்த சாலைகள் தற்காலிகமாக சீர் செய்யப்பட்டாலும் பின்பு மீண்டும் சில நாட்கள் பின்பு பழுதடையும் நிலையில் இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் தேவைகளை கருதி உடனடியாக நிரந்தர திட்டம் மூலம் தீர்வு காண, உயர்தரத்தில் வடிகால் அமைத்து சாலைகளை நல்ல முறையில் சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.