ராமநாதபுரம், பிப்.12-
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு தொண்டி மேல பள்ளியில் எட்டு ஜமாத்துகளின் கூட்டமைப்பான தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு பொறியாளர் எம் எம் அபூபக்கர் அவர்கள் தலைமையில் முன்னாள் ஐக்கிய ஜமாத்தின் நிர்வாகிகள், அனைத்து தெருக்களின் தலைவர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையிலும் ஏக மனதாக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றன இதில் ஐக்கிய ஜமாத் உடைய தலைவராக முன்னாள் செயல் அலுவலர் சையத் அலி அவர்கள் கௌரவத் தலைவராக பொறியாளர் அபூபக்கர் அவர்கள் செயலாளராக முஹம்மது பாரூக் அவர்கள் பொருளாளராக அஹமது ஜலால் அவர்கள் துணைத் தலைவராக வழக்கறிஞர் ஜிப்ரி அவர்கள் துணைச் செயலாளராக யாகூப் அவர்கள் pv பட்டினம் பரக்கத் அலி கௌரவ ஆலோசர்களாக பரக்கத் அலி , ஷேக் அப்துல்லா ,முகமது அஸ்கர் ஆகிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் இதில் முன்னாள் ஐக்கிய ஜமாஅத் செயலாளர் முகமது ஃபாரூக் அவர்கள் நன்றி கூறினார் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்