கன்னியாகுமரி பிப் 9
குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பி.ஜே.பி.ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்தும்,நீண்டகால திட்டங்களால் எய்ம்ஸ் மருத்துவமனை,மெட்ரோ ரெயில் திட்டம்,இரயில்வே வழிதடங்களுக்கு உரிய நிதி ஒதுக்காமல் முடக்குவது கல்வித்துறைக்கு உரிய நிதி ஒதுக்காமல் கல்வியில் பின்தங்கவைப்பது போன்ற செயல்களை செய்து தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதை கண்டித்துமாநிலம் தழுவிய அளவில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்கினார். துணைசெயலாளர் சுரேஷ் மேசியதால், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தோழியர் செல்வராணி மாவட்ட குழு உறுப்பினர் தோழர் வி.அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் செம்பை கல்யாணசுந்தரம் தக்கலை ராஜ்,பூதை மகேஷ்,ஆறுகாணி சுகுமாரன்,ஆரல் பொருளாளர் வாசு, சுப்பிரமணியம்,குருசாமி,உட்பட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.மாநகர செயலாளர் தோழர் குலசேகரபுரம் நாகப்பன் நன்றி கூறினார்.