ஊட்டி. பிப்.09
ஊட்டியில் மீண்டும் பனி பொழிவு தொடங்கியுள்ளதால் மக்களின இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மலை மாவட்ட விவசாயகள் கவலையடைந்துள்ளனர். ஊட்டி மற்றும் சுற்றிவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கத்தால் குளிர் தன்மை ஜீரோ டிகிரியாக பதிவாகியுள்ளது. கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அதிக குளிரால் ஊட்டி பொது மக்களும், சுற்றுலாவாசிகளும் அவதியுற்று வருகின்றனர். மலை காய்கறி பயிர்களான மேரக்காய் கொடிகளும், உருளைக்கிழங்கு செடிகளும் கருகும் நிலையாகியுள்ளது. காய்கறி பயிர்களுக்கும் தேயிலை செடிகளுக்கும் விவசாயகள் ஸ்பிபிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அதிகாலை நேரங்களில் தேயிலையில் கை வைப்பதால் உப்புபனி பட்டு கைகள் புண்ணாகி அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா தளங்களான ஊட்டி ரோஜா பூங்கா, பொட்டானிகள் கார்டன் போன்றவற்றில் மலர்களை பாதுகாக்க மிளார் செடிகளை கொண்டு மூடி வருகின்றனர். பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவுவதால் சாலையோரங்களில் புல் தரை காய்ந்து வருவதோடு வனப்பகுதிகளில் போதிய நீரின்றி வன விலங்குகள் உணவு குடிநீர் தேடி ஊருக்குள் வருகிறது. வரும்காலங்களில் பனியின் தாக.கம் அதிகரிக்க கூடும் என்பதால் வனப்பகுதி மற்றும் புல் தரை பகுதிகளில் தீபரவாமல் தடுக்க விழிப்புடன இருக்க வனத்துறை எச்சரித்துள்ளது. இரவில் கடும் குளிரும், பகலில் அதிகமான வெப்பநிலையும் இருக்கும் என்ற வானிலை அறிவிப்பால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன் உடல் உபாதைகளும் ஏற்படும் என சுகாதார துறையும் தெரிவித்துள்ளன பொதுவாக கோடை தொடங்குவதால் படிபடியாக பனியின் தாக்கம் குறைந்து வறண்ட காலநிலையால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
தற்போது நிலவும் குளிர் காலநிலையால் ஊட்டி நகர் பகுதிகளில் குளிர்கால ஆடைகளான கம்பளி, சுவட்டர், சால்வை , ஜர்கின் போன்றவை விற்பனை அதிகரித்துள்ளது.