பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
மறைந்த மாமனிதர் முனைவர் பழனிபாபா அவர்களின் நினைவு தினத்தை பழனி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆயக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமதிஆம்ஸ்ட்ராங் வழிகாட்டுதல்படி மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் ஆலோசனைபடி திண்டுக்கல் மாவட்ட பொது செயலாளர் நாச்சிமுத்து தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் திண்டுக்கல் மாவட்ட தலைவர், அரசூர் மனோகரன், முன்னால் மாநில பொது செயலாளர் பகத்சிங் பழனிசாமி, மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், முருகராஜ், அஜித், கர்ணன், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், பழனி சட்டமன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.