தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 319 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகி லெட்சுமிகாந்தன் பாரதிக்கு பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கௌரவித்தார்.
தென்காசி மாவட்ட காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு புறாக்களை பறக்க விட்டு மூவர்ண பலூனினை வானில் பறக்க விட்டார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 50 நபர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவலர் பதக்கத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தென்காசி காவல் துறை சார்பில் 52 காவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 23 அலுவலர்களுக்கும், மாவட்ட அளவிலான அனைத்து துறையை சார்ந்த 12 அலுவலர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் 54 அலுவலக பணியாளர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் 31 அலுவலக பணியாளர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் துறையின் 09 அலுவலக பணியாளர்களுக்கும், பேரூராட்சித்துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் 03 அலுவலக பணியாளர்களுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 10 அலுவலக பணியாளர்களுக்கும், மாவட்ட நில அளவை துறையின் 05 அலுவலக பணியாளர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், கூட்டுறவுத்துறையின் (பொது விநியோகத்திட்டம்) 12 அலுவலக பணியாளர்களுக்கும், உதவி இயக்குநர் அலுவலகம் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) தென்காசி மற்றும் திருநெல்வேலி 02 அலுவலக பணியாளருக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறையின் 09 அலுவலக பணியாளர்களுக்கும், EMRI GREEN HEALTH SERVICES (108) துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், தோட்டக்கலைத்துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், கால்நடை பராமரிப்புத்துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் 48 பணியாளர்களுக்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் துறையின் 05 அலுவலக பணியாளர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 06 அலுவலக பணியாளர்களுக்கும்,, தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத் துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், மாவட்ட நூலகத்தின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், மாவட்ட சமூகநலத்துறையின் 05 அலுவலக பணியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 01 அலுவலக பணியாளருக்கும், பொருள்இயல் மற்றும் புள்ளியல் நலத்துறையின் துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், பள்ளிக்கல்வித்துறையின் 06 அலுவலக பணியாளர்களுக்கும், கல்லூரிக் கல்வித் துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுத்துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், சாலை பாதுகாப்பின் 01 தன்னார்வலருக்கும் என மொத்தம் 319 நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 05 நபர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகையினையும், 2023 -2024 ஆம் ஆண்டில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மாணவிகள் விடுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த 03 விடுதிக்காப்பாளர்களுக்கு சிறந்த காப்பாளர் விருது மற்றும் பரிசுத்தொகையினையும், உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்லூரிக்கல்வித்துறை, கலால்துறை இணைந்து நடத்திய போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற 05 குழுக்களுக்கு ரூ.53,000/- பரிசுத்தொகைக்கான காசோலையினையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலகத்தின் மூலம் தேசிய அளவில் சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 04 மாணவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினையும், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற 31 மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ்களையும், பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தின் மூலம் தேசிய அறிவியல் கருத்தரங்கில் வெற்றி பெற்ற 01 பள்ளி மாணவிக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினையும் என மொத்தம் 49 நபர்களுக்குக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் விருதுகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.4,43,500/-மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 02 பயனாளிகளுக்கு ரூ.49,250/- மதிப்பிலான நலத்திட்டங்களும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 04 பயனாளிகளுக்கு ரூ.49,250/- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.5.19 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.