சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றிய பகுதியான காரைக்குளம், கண்ணமங்கலம், தாயமங்கலம், தடியமங்கலம் ஆகிய நான்கு ஊர்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் , வட்டாட்சியர் முருகன் , கொள்முதல் அலுவலர் அயன்ராஜ் , கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுப.தமிழரசன் , சிவகங்கை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுப.அன்பரசன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



