சென்னை, ஜன-25,
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இளைஞரணி மாநில செயலாளர் எஸ் .கே .ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன் குமார்,
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர் பில்டர் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் தலைவர் வி. என் .கண்ணன், முன்னாள் தமிழ்நாடுமாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் சிறப்புகளை அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மருத்துவ சமூக மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர் .மேலும் இந்நிகழ்ச்சியில் சங்க மாநில தலைவர் எம் .நடேசன் மாநில பொதுச் செயலாளர் கம்பம் ராஜன் பொருளாளர் எஸ் .குமார் உள்ளிட்ட மகளிர் மற்றும் 3000க்கும் மேற்பட்ட மருத்துவ சமூகத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.