திண்டுக்கல், ஜன-22
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப் டிவிஷன் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கொடைரோடு சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்றது. இதில், திண்டுக்கல் நிலக்கோட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரமணி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும்,வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, மது அருந்தி வாகனம் இயக்கக் கூடாது, முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்வின் போது கொடைரோடு சுங்கசுவாடி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்திய போக்குவரத்து காவல்துறையினர், அவர்களில் ஹெல்மெட் அணிந்தவர்களை பாராட்டி வாழ்த்தி உற்சாகப்படுத்தினர். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணியாததால் விளையும் அபாயங்கள் குறித்து எடுத்துரைத்ததுடன்,எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் கண்ணியம், மற்றும் காவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.