குலசேகரம், ஜன் – 18
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருநந்தி கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி சுதா (42). இந்த தம்பதிக்கு அனீஸ் (22),நிதிஷ் (21) மற்றும் மனிஷ் (17) என்ற மூன்று மகன்கள் உள்ளனர். மணிகண்டன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுதா தற்போது நோட்டல் வைத்துள்ளார்.
இரண்டாவது மகன் நிதிஷ் பி காம் படித்துவிட்டு அரசு வேலைக்கு தேர்வு எழுதி வந்துள்ளார். இந்த நிலையில் நிதிஷ் வழக்கம் போல் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஓட்டலை திறந்து வியாபாரம் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் மதியம் சுதா மூன்றாவது மகனுடன் வீட்டுக்கு சென்ற போது அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் நிதிஷ் காணப்பட்டார். உடன் உறவினர் உதவியுடன் நிதிசை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நிதிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்தது போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நிதிஷ் தூக்கமின்மை பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


