களியக்காவிளை, ஜன,20 –
களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை, செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில்
சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் மற்றும் வைகுண்டம். அமைக்கப்பட்டுள்ளது.
உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்த செங்கல் சிவபார்வதி கோயிலில் 6 ஆவது அதிருத்ர மகாயாகம் பிப்ரவரி மாதம் 13 ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி யாகத்துக்கான கால்நாட்டு விழா கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி காலையில் மகா கணபதி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து கோயில் மேல்சாந்தி குமார் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கால்நாட்டு விழாவில் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் அனுகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் நெய்யாற்றின்கரை நகராட்சி தலைவர் ராஜ்மோகன், செங்கல் கிராம ஊராட்சி துணைத் தலைவர் அஜித்குமார், பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் ஜோஜி, கேரளா முன்னாள் அமைச்சர் சிவகுமார்,என்.எஸ்.எஸ். அமைப்பின் தாலுகா யூனியன் தலைவர் மோகன்தாஸ் மற்றும் பக்தர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



