கன்னியாகுமரி, மே. 15
கன்னியாகுமரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கன்னியாகுமரி சீ பேர்ட்ஸ் அணி முதல்பரிசு பெற்றது. கன்னியாகுமரி சீபேர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டியில் கன்னியாகுமரி சீ பேர்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. இந்த அணிக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை கன்னியாகுமரி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ் வழங்கினார். இரண்டாவது பரிசு பெற்ற புதுக்கிராமம் அணிக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், மூன்றாம் பரிசு பெற்ற நாகர்கோவில் இந்துக்கல்லூரி அணிக்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், நான்காவது பரிசு பெற்ற கன்னியாகுமரி பி அணிக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் பரிசுகளாக வழங்கப்பட்டன.



