By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
மதுரைமாவட்டம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

Last updated: January 15, 2025 10:09 am
January 15, 2025
55 Views
Share
SHARE

மதுரை,  தமிழர் திருநாள் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மந்தை அம்மன் கோவிலில் கிராம கமிட்டி, மாநகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் சார்பாக சாமி கும்பிட்டு வாடிவாசலில் பூஜை நடைபெற்று பின் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பிடி பழனி வேல் தியாகராஜன் 

தலைமையில் உறுதிமொழி ஏற்ற பிறகு ஜல்லிக்கட்டு தொடங்கியது.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை ஏழு மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாலை ஆறு மணிக்கு நிறைவுற்றது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசு பொருட்களை மதுரை மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்தியாயினி தலைமையில் மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி, விஏஓ சிவராமன் உள்ளிட்ட அதிகாரிகள் அவனியாபுரம் அருகே உள்ள பி எம் எஸ் பள்ளியில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காளைகளுக்கு பரிசு பொருட்களை சேகரித்து வந்தனர். அதில் சில்வர் குடம், ரேஞ்சர் சைக்கிள், இண்டக்க்ஷன் ஸ்டவ், கட்டில், மெத்தை , பீரோ, டேபிள் பேன்,  மிக்ஸி, அயன் பாக்ஸ், பிரஷர் குக்கர், தங்கம் மற்றும் வெள்ளி காயின், கார், டிராக்டர் என்று பல பரிசு பொருட்களை அறிவித்தனர். இதில் மதுரை விளாங்குடி சொக்க நாதபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய நவீன் என்ற மாடுபிடி வீரரை காளை முட்டியதில் மார்பில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மதுரை முத்துக்காளை, ரவி மணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது உடனே காளையை பாய்ந்து பிடித்து அடக்கிய ரஞ்சித் என்ற வீரருக்கு களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இந்த நிலையில் பரிசு பெற்ற ரஞ்சித் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 55, மாடுபிடி வீரர்கள் 28 பேர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 8 பேர்கள், பார்வையாளர்கள் 17 பேர்கள் ஆகும்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக் முதல் இடம் பிடித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8.50 லட்சம் மதிப்புடைய நிசான் நிறுவனத்தின் ‘மேக்னட்’ கார் மற்றும் கன்றுடன் கறவை மாடு பரிசாக பெற்றார். குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 15 காளைகளை அடக்கிய இரண்டாம் இடத்தைப் பிடித்து மோட்டார் பைக் பரிசாக பெற்றார்.

மேலும் சிறந்த காளையாக முதலிடம் பெற்ற மலையாண்டியின் காளைக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் டிராக்டர் மற்றும் கன்றுடன் கறவை மாடு பரிசாக பெற்றார். 

டாக்டர் ஜிஆர் கார்த்திக் வேலுவின் காளைக்கு இரண்டாவது பரிசாக மோட்டார் பைக் பரிசாக பெற்றார். இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெவ்வேறு மாநிலம் மற்றும் மற்ற மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த 

ஜல்லிக்கட்டுக்கு காவல் துறை சார்பாக ஆயிரம் காவலர்களுக்கு மேல் பணியில் அமர்த்தப்பட்டனர். தீயணைப்பு துறை மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை சார்பாக முதலுதவிக்காக ஆங்காங்கே பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சரின் பிறந்தநாள் மருத்துவ முகாம்
தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்
கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்
148 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை

May 9, 2024
183 Views
தக்கலை அருகே மொட்டை மாடியில் பதுங்கி இருந்து இளம் பெண்ணிடம் அத்துமீறியவர் தப்பி ஓட்டம்
சுனிதா வில்லியம்ஸ்சுக்கு பாராட்டு விழா
இளங்கோவன் அவர்களுக்கு நினைவஞ்சலி
என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account