மதுரை ஜனவரி 10,
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சு.சதிஷ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்