களியக்காவிளை, ஜன- 7
களியக்காவிளை அருகே பளு கல் | பகுதியில் தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் சட்டவிரோதமாகவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பளு கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
. அதன் பெயரில் போலீசார் சம்பந்தப்பட்ட பாருக்கு சென்று நேற்று இரவு சோதனை நடத்தினர். அப்போது பாரில் சட்ட விரோதமாகவும், நேரத்தை கடந்தும் மது விற்ற பார் மேலாளர் காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த ரகு (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.