திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டியில் புனித வின்சென்ட் தே பவுல் சபையின் வைர விழா கண்ட புனித ஞானப்பிரகாசியார் கிளை சார்பில்
73- வது ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி கொசவபட்டி புனித உத்திரிய மாதா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு
திண்டுக்கல் மத்திய சபை தலைவர் B.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கொசவபட்டி ஊர் பெரிய தனக்காரர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கொசவபட்டி உதவி பங்குத்தந்தை அருட்பணி K.ஜான், நாட்டாண்மை Ln.Dr.N.M.B. காஜாமைதீன், தொழிலதிபர் வேம்பார்பட்டி PMSK.M. அபுதாகீர் , திண்டுக்கல் புனித லசால் புதுமனம் தொழிற்பயிற்சி நிலைய தாளாளர்
அருட்தந்தை ஜோசப் ராஜ், கொசவபட்டி வழக்கறிஞர் A.ஆரோக்கியசாமி, சமூக ஆர்வலர் K.சாதிக், கொசவபட்டி புனித வின்சென்ட் தே பவுல் சபை உறுப்பினர்கள் இணைந்து அன்னதானம் வழங்கும் திட்டம்,
கல்வி உதவித்தொகை திட்டம், மருத்துவ உதவி தொகை திட்டம், தையல் இயந்திரம் கடனுதவி திட்டம், ஆடுகள் வளர்ப்பு திட்டம், அன்னதானம் வழங்கும் திட்டம், மிதிவண்டி கடனுதவி திட்டம், சிறு தொழில் கடன் உதவி திட்டம், மனவளர்ச்சி குன்றியோர் மறுவாழ்வு திட்டம், சுவிகார உதவி வழங்கும் திட்டம், 350 ஏழைகளுக்கு போர்வை ஆடைகள் வழங்கல், போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை புனித வின்சென்ட் தே பவுல் சபையின் கிளை சபைத் தலைவரும்,திண்டுக்கல் புனித லசால் புதுமனம் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியருமான M.ஜெயசீலன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் 600 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்நிகழ்வில் சபையார்கள், இளம் சிறார் வின் செந்தியர் புனித வின்சென்ட் தே பவுல் சபை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.