மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் இருக்கும் சமூக சேவகர் மார்க்கோனி மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார் இன்நிலையில் இன்று அவரது இல்லத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் உள்ள 135 மாற்று திறனாளிகளுக்கு வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சரிசி, பருப்பு ஏலக்காய் ,நெய்,மஞ்சள், உள்ளிட்ட 10 பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி உட்பட 11 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் வழங்கினார். பரிசுத்தொகுப்பினை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர். நிகழ்ச்சி சீர்காழி பொதுமக்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



