திருப்பத்தூர்:ஜன:06, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பாக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைதள பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் தலைமை வகித்தார்.
நகர கழக செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் மதுரை பாலா, அன்பகம் விக்னேஷ் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பாக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சிகளை அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர்கள் மோகன், சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் ஜோதி ராஜன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுநாத், அரசு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிரிராஜ், செந்தில்குமார், பிரபு, தமிழ்மணி, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி. திருமதி திருமுருகன், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு, நகர இளைஞரணி அமைப்பாளர் மாதேஷ், துணை அமைப்பாளர் ஐயப்பன், கந்திலி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் தமிழ் குடிமகன், ஸ்டாலின் சக்திவேல் மற்றும் மாவட்ட, நகர,ஒன்றிய கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.