மதுரை டிசம்பர் 28,
மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள ராஜாஜி முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் குறித்த சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சியின் தலைமை வகித்து சிறப்பு கருத்துகளை எடுத்துரைத்தார் சங்கர் DSW HUB TEAM. மேலும் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக முதியோர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு அளிக்கும் உதவிகள் மற்றும் சட்டங்கள் குறித்தும் தங்கள் சொத்துக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். ராஜாஜி முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் மகேஸ்வரி இறுதியில் நன்றியுரை வழங்கினார்