நாகர்கோவில் டிச 27
நாகர்கோவில் பால்பண்ணை அருகே நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில் செல்லும் சாலையில் இன்று திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து விழுந்தது .
இதனால் அந்தவழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் சாலையை கடக்க கடும் சிரமப்பட்டு கடந்து வந்தனர்.அப்போது அவ்வழியாக காரில் சென்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் காரில் இருந்து இறங்கினார் .
தொடர்ந்து மரம் முறிந்து விழுந்தது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் தீபக் சாலமன்,மாவட்ட செய்தி தொடர்பாளர் விஜேஸ், நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள் ஜாண்,ஷாஜி,நாகராஜ்,அருள் அஜித் ஆகியோர் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் கிடந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.
இதையடுத்து,அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மரக்கிளைகளை வெட்டி அகற்றிய நாம் தமிழர் கட்சியினரை அப்பகுதி பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.