தருமபுரி மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு 1,000 நாட்கள் ஆகியும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம். எல் .ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம் பி செந்தில், மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்னியர்களுக்கு 10 .5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரியும், இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசு கண்டித்தும், தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்க பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



