முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாஜக சார்பில் கிட்டப்பா அங்காடி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாயின் உருவப்படத்திற்கு பாஜக மாவட்ட துணைத் தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். முன்னதாக, மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் மாவட்ட துணைத் தலைவர் மோடி.கண்ணன் முயற்சியால் மத்திய அரசின் பெண்குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இதுவரை 4500 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வருமாண்டில் இதனை 10,000-ஆக உயர்த்த உறுதியேற்றுக்கொண்டு, ஏழ்மை நிலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கு முதல் தவணைத்தொகையான தலா ரூ.1000-த்தை செலுத்தி சேமிப்புத் திட்டத்தை தொடங்கி வழங்கினர். இதில் கோவி சேதுராமன், நாஞ்சில் பாலு,
கோமல் வினோத், ஸ்ரீதர், ஈழவேந்தன், மற்றும் ராஜகோபால், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.