ராமநாதபுரம், டிச.23-
ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை ஒட்டி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் கேக் சிலைகள் ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பாக வைக்கப்பட்டு வருவது வழக்கம். இந்தாண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொழில் துறையில் சாதனை புரிந்த ரத்தன் டாடா கேக் சிலை வைத்து அசத்தி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஸ்வர்யா குரூப் உணவு மற்றும் பேக்கரி நிவனத்தினர் தனி முத்திரை பதித்து வருகின்றனர். தரமான சுவையான உணவு மற்றும் பேக்கரி ஸ்வீட்ஸ் காரம் தயாரிப்பு நிறுவனமான ஐஸ்வர்யா ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களான
இளையராஜா மரோடானா பாரதியார் ஆகியோரது கேக் சிலைகள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வருடமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையோட்டி தொழில் துறையில் சாதனை புரிந்த ரத்தன் டாட்டா உருவத்துடன் அவர் செல்லமாக வளர்த்த பிராணியுடன் கை கொடுப்பது போல் கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா தொழிலில் சாதனை புரிந்தது மட்டுமல்ல. அவரது ஈகை குணம் எல்லாரையும் வியக்க வைத்தது. கொரோனா காலங்களில் கூட நிதியினை அள்ளித் தந்துள்ளார் .
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
இந்தக் குறளுக்கு ஏற்ப தன்னுடைய வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்தவர். அவரது ஞாபகமாக அவர் போல தொழிலில் சிறந்து மட்டும் இன்றி ஈகை குணம் புத்தாண்டில் அனைவருக்கும் வளர வேண்டும் என்ற நோக்கில் ரத்தன் டாடா உருவ கேக் சிலை வைத்து உள்ளனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யா நிறுவனத்தார் கூறும் போது:
ரத்தன் டாடா உருவ கேக் சிலை 60 கிலோ சர்க்கரை மற்றும் 250 முட்டைகளைக் கொண்டு சுமார் 7 அடி உயரத்தில் தயாரிக்க ஆறு பேர் சேர்ந்து 30 மணி நேரத்தில் தயாரித்தனர்.
தற்போது இந்த கேக் ராமநாதபுரம் ஐஸ்வர்யாஸ் பேக்கரிஸ் பாரதி நகர் கிளையில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .
இதனை அனைவரும் விரும்பி பார்த்து போட்டோ எடுத்து செல்கின்றனர், என்றனர்.