By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 104 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 104 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி
ஈரோடுமாவட்டம்

104 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி

Last updated: December 18, 2024 10:01 am
December 18, 2024
61 Views
Share
SHARE

ஈரோடு டிச 17 

ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவுத் திட்டம் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் மற்றும் பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட அனைவரும் தங்களுக்கு தெரிந்த விருப்பமான, முன் அனுபவம் உள்ள தொழில் புரிந்து வருவாய் ஈட்டி பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேறும் பொருட்டு 2023-24-ம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவுத் திட்டம்  துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பதாரரே தொழிலை தெரிவு செய்து கொள்ள வேண்டும். திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 35 சதவீதம் அல்லது ரூ.3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும்.


அதேபோல, பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் போஜ்னா திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஒவ்வொரு குடுபத்திற்கும் அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது ரூ.50,000 இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். மேலும், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்  ஆதிதிராவிட மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும் ஆதிதிராவிட மகளிர் பெயரில் நிலம் வாங்கவும், ஆதிதிராவிட மக்களின் நில உடமையை அதிகரிக்கும் பொருட்டும், அந்நிலத்தை மேம்படுத்த பல்வேறு


உதவிகள் அளித்து வேளாண் உற்பத்தி திறன் அதிகரிப்பதை நோக்கமாகவும் கொண்டு செயலப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை புன்செய் நிலம் அல்லது 2.50 ஏக்கர் வரை நன்செய் நிலம் வாங்கலாம். நிலத்தின் மதிப்பு அரசின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயனாளியின் பெயரில் பத்திரம் பதிவு செய்யும் போது பத்திர பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் செலவில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 18 வயதிற்க்கு மேலும் 65 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் நிலம் வாங்க மற்றும் மேம்பாட்டுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது ரூ.5.00 இலட்சம் இதில்

எது குறைவானதோ அத்தொகை மானியமாகவும், மீதமுள்ள தொகை வங்கி கடனாக அல்லது சொந்த முதலீடாக வழங்கப்படுகிறது.


2024-25-ம் ஆண்டு தாட்கோ திட்டங்களான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தில்  54 பயனாளிகளுக்கு ரூ.1,11,48,038 மதிப்பீட்டிலும், நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.5,00,000 மதிப்பீட்டிலும், பிரதான் மந்திரி – அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா (ன திட்டத்தில் 49 பயனாளிகளுக்கு ரூ.24,50,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.1,40,98,038 மதிப்பீட்டில் மானியத்துடன், கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.


தாளவாடி வட்டம், தலமலை கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் தாட்கோ சார்பில் மானியத்துடன் கடன் உதவி பெற்று, நிறைந்த மனதுடன் தெரிவித்ததாவது,

தாட்கோ சார்பில் கனரக வாகனம் வாங்குவதற்கு மானியத்துடன் கடன் உதவி பெற்ற ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், தலமலை கிராமத்தைச் சார்ந்த ராஜா நான் தலமலை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நான் கடந்த 15 ஆண்டுகளாக வாடகைக்கு 4 சக்கர வாகனங்களை ஓட்டி வந்தேன். நீண்ட நாட்களாக சொந்த வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பணத்திற்கு என்ன செய்ய செய்யலாம் என யோசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ், உரிய ஆவணங்களுடன் நான் விண்ணப்பித்திருந்தேன். இதில் எனது மனு ஏற்கப்பட்டு, கடந்த வாரம் எங்கள் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில், ரூ.9,82,000 மதிப்பீட்டிலான கனரக வாகனம் வாங்குவதற்கு ரூ.3,44,000 மதிப்பீட்டில் மானியமும், மீதமுள்ள தொகை கடனாகவும் வழங்கப்பட்டது. வாடகை வண்டி ஓட்டி வந்த நான், தற்பொழுது சொந்தமாக வாகனம் வாங்கி மகிழ்ச்சியுடன் ஒட்டி வருகின்றேன். எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களும் மேம்பாடு அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பி இடம் கோரிக்கை
மத்திய அமைச்சரை கண்டித்து மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
காவல்துறை இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டி
பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
தே.மு.தி.க காமராஜ் நகரில் உறுப்பினர் சேர்க்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை

February 18, 2026
25 Views
குமரியில் பிளஸ் 1, பிளஸ் 2 முதல் இடைத்தேர்வு; ஜூலை 29ல் தொடக்கம்
பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம்!
ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக தேர்தல் அரசன் சின்னம் அறிமுகம்
மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account