நாகர்கோவில் டிச 14
நாட்டில் பெருகி வரும் விரைவு வர்த்தகம் காரணமாக சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பு அடைவதை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்.
சிறு குறு வியாபாரம் செய்து வந்த வணிக கடைகள் கடந்த 10 ஆண்டுகளில் 18.9% குறைந்துள்ளது.
வளர்ச்சி அடைந்துள்ள விரைவு வர்த்தக நிறுவனங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். வணிக கடைகளின் தேய்வு வேலை வாய்ப்பு இழக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடி தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.
ஆகையால் சின்ன வணிக கடைகளை அரசு ஊக்குவித்து அவர்களுக்கு போதிய ஆதரவு அளிக்க வேண்டும். மேலும் விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்கு படுத்தி வணிக கடைகள் அழிந்து விடாமல் அரசு பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.