கோசாகுளம் சி.இ.ஒ.ஏ. பதின்ம மேனிலைப் பள்ளி மாணவர்கள் 31 பேர் 490 க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை.
மதுரை, மே 11,
மதுரை கோசாகுளம் சி.இ.ஒ.ஏ. பதின்ம மேனிலைப் பள்ளியில் 31 மாணவர்கள் 490 க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
நேற்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின அதில் சி.இ.ஒ.ஏ. பள்ளி மாணவர்கள் 500 க்கு 490 க்கு மேல், 31 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
டி. காவ்யா, எஸ். பாலதர்சினி, எம். மாரிஸ்ரீ ஆகிய மூன்று மாணவர்கள் 496/500 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
என். ஜெகத் இரட்சகன், எஸ்.தர்ஷனா, P.U.பிரிஜேஷ் ஆகிய மூவர் 495/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
எம்.வி. ஜஸ்வந்த், எஸ். பவிஷ்னா, எம். இரபிகாஷரின், எம்.சி. சுபதனவர்ஷினி ஆகிய நால்வர் 494/500 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும் இப்பள்ளி மாணவர்கள் 98 சென்டம்களையும் (100/100 மதிப்பெண்கள்) பெற்றுள்ளனர். அவர்கள் பெற்ற முழுமதிப்பெண் முறையே கணிதம் – 48, அறிவியல் -24 , சமூக அறிவியல்-23 மற்றும் ஆங்கிலம் – 3 ஆகும்.
இவர்கள் அனைவருக்கும் பொன் துகில் அணிவித்து, சி.இ.ஒ.ஏ பள்ளியின் நிறுவனத்தலைவர் அலசி மை. இராசா கிளைமாக்சு பாராட்டினார். அப்போது சமீபத்தில் வெளியான +2 தேர்வில் எம்பள்ளி மாணவர்கள் 595/600 பெற்று சாதனை புரிந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விலும் மூன்று மாணவர்கள் 496/500 பெற்று சாதனை புரிந்துள்ளனர். அடுத்து வெளியாகவிருக்கும் நீட் தேர்விலும் சாதனை நிகழ்த்தும் வண்ணம் சி.இ.ஓ.ஏ மாணவர்கள் நீட் தேர்வையும் திறம்பட எழுதியுள்ளனர் என்று கூறினார். அவர்களைப் பள்ளித் தலைவர் இ. சாமி, பள்ளியின் இயக்குநர்கள் அசோகராஜ்,விக்டர் தன்ராஜ், சௌந்திரபாண்டி, . பாக்கியநாதன், ஜெயசந்திரபாண்டி மற்றும் பிரகாஷ் ஆகியோர் பாராட்டினர். மேலும், பள்ளியின் முதன்மை முதல்வர் செல்வி கலா, பள்ளியின் தாளாளர் ஜெனிட்டா, பள்ளி முதல்வர்கள் மஞ்சுளா, சாந்தி மற்றும் ஆசிரியர்களும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைை பாராட்டி மேன்மேலும் கல்வி அறிவியல் சிறந்து விளங்க வாழ்த்தினார்.